மதுரை யானைமலை ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவ, மாணவிகள் சார்பில் ‘எங்கள் பள்ளி மிளிரும் அரசுப் பள்ளி ‘ என்னும் தலைப்பில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி புத்தாண்டை முன்னிட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு முன்னாள் மாணவர் பாண்டியன் மற்றும் ராஜ்குமார் தலைமை தாங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து, தாங்கள் படித்த பள்ளிகளில் மரங்கள் உள்ளன. மரத்தில் இருந்து உதிரும் இலைகள் பள்ளிக் கட்டிட மேற்கூரையில் விழுந்து அதிகளவில் குப்பையாக சேர்ந்துள்ளதாகவும் , மழையின்போது இக்குப்பைகள் நீரில் நனைந்து கட்டிட உறுதிக்கு ஊறு விளைப்பதாக உள்ளது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் மேற்கூரையில் உள்ள காய்ந்த இலைகள்/சருகுகளை அகற்றிடவும், ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு கட்டிடத்தின் மேற்கூரையில் மழை நீர் தேங்காதவாறும், மழை நீர் வடிவதற்கான துவாரங்கள் இலை தழைகள் மற்றும் குப்பைகளால் அடைபடாதவாறும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்திடும் வகையில், தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகாத வண்ணம் பள்ளிகளில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பள்ளி வளாகத்தின் தேவையான பகுதிகளில் கொசு மருந்து தெளித்து சுகாதாரமான சூழலில் பள்ளி செயல்படுவதை உறுதி செய்திடவும், பள்ளி வளாகம் புதர்கள் மற்றும் குப்பைகளின்றி காண்பதற்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மாணவ, மாணவிகள் எண்ணினர். மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நலன் கருதி, 2003-2005 ம் ஆண்டு முன்னாள் மாணவ, மாணவிகள் சார்பில் ‘விழிப்புணர்வு’ ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தனர்.

தொடர்ந்து புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பள்ளி வளாகம் பால்கனி மேல் மாடியில் உள்ள மரங்கள், செடிகள், அசுத்த குப்பைகள் உள்ளிட்டவைகளை சுத்தம் செய்து அகற்றினர். இதன் முன்னதாக முன்னாள் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன், முன்னாள் மாணவ மாணவிகள் கார்த்திக், உமா சங்கரி, மலர்விழி, ஆதி லெட்சுமி, ரெஜினா மற்றும் அன்னபூரணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
