மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 57வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ரவிக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த ஏழு மாணவர்கள் ஒரு மாணவி உட்பட எட்டு பேர் திடீரென பல்கலைக்கழக வாயிலில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.


பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்பு ஆளுநர் ரவி விருதுநகர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது எஸ்.எம்.ஐ மாணவர்கள் தங்களின் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆகிய இருவரும் காமராஜர் பல்கலைக்கழக மாணவர்களாக உள்ள போதிலும் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கைது செய்ததை கண்டிக்கிறோம். ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் திட்டமிட்டு தமிழகத்திற்கு எதிராக உள்ளதால் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.






