புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதுக்கோட்டை மாநகரத்தின் முதல் முறையாக சோழன் உலக சாதனை சாணக்கிய அகடமி இணைந்து 152 மாணவ, மாணவிகள் பங்கேற்ற 33 நிமிடத்தில் 333 முறை சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்கள். மேலும் நிகழ்வில் வாழ் வீச்சு, சுருள்வால், நெருப்பு சிலம்பம் உள்ளிட்ட சாகசங்களையும் வீரர்கள் செய்து காண்பித்து அசத்தினர்.
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதுக்கோட்டை மாநகரத்தில் முதல் முறையாக சோழன் உலக சாதனை சாணக்கிய அகடமி இணைந்து சிலம்பத்தில் 33 நிமிடத்தில் 333 முறை நாலு வீடு கட்டி உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் சாணக்கிய அகடமி சேர்ந்த ஆறு வயது முதல் 13 வயது வரை உள்ள மாணவ, மாணவியர்கள் 152 பேர், 333 முறை சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர். இந்த உலக சாதனையை நிகழ்த்திய மாணவ, மாணவிகளுக்கு சோழன் உலக சாதனை நிர்வாகிகள் சாதனைக்கான சான்றிதழை வழங்கி சிறப்பித்தனர். மேலும் சாணக்கிய அகடமியைச் சேர்ந்த சிலம்பம் சுற்றும் வீரர்கள் வால் சுற்றுதல் பல்வேறு வகையான பல்வேறு வகையான சிலம்பங்களை சுற்றியும் நெருப்பு பந்தங்கள் ஏந்தி சிலம்பங்கள் சுற்றையும் பல்வேறு சாகச நிகழ்சிகளையும் செய்து காண்பித்தது. நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்வில் மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட விளையாட்டு அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உலக சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ்கள் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தனர்.
