தேனி மாவட்டம், போடி ராணிமங்கம்மாள் சாலை, கரட்டுபட்டி, தோட்டம் வாக்கர்ஸ் கிளப், சூல் இயற்கை அமைப்பு மற்றும் ரெங்கநாதபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வழியில் அரசு மதுபான குடத்தை அகற்றிய இடத்தில் மீண்டும் தனியார் மதுபானக் கூடம் அமைக்க கூடாது என போடி பொறியியல் கல்லூரி மாணவர்கள் மோடி -தேவாரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே அரசு மதுபானக் கடை இருந்தது. அதன் மூலம் பல இன்னல்கள் மற்றும் பிரச்சனைகள் நடந்துள்ளன
(அந்த மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு அருகில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவரை பாட்டிலால் மண்டையில் அடித்து பல பிரச்சனைகள் நடந்து கல்லூரி மாணவர்கள் போரட்டத்திற்கு பின் அந்த அரசு மதுபானக்கடை மூடப்பட்டுள்ளது).
இப்போது அதே இடத்தில் தனியார் மதுபானக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. அதை சுற்றி அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிகள் அமைந்துள்ளன. அந்த வழியில் தான் மாணவ, மாணவிகள் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்லும் நிலைமை உள்ளது.
இதனால் இதற்கு முன்பு இருந்த அரசு மதுபானக் கடையால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பயத்துடன் செல்லும் நிலைமை இருந்தது.
பல மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்ல இயலாத நிலைமை ஏற்பட்டது. இதை சுற்றி பல ஊர்கள் அமைந்துள்ளன. மதுபானக் கடைக்கு பின்புறத்தில் வீடுகள் பல அமைந்துள்ளன.
இது குறிந்து தேனி மாவட்ட ஆட்சி தலைவருடன் புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து இன்று போடி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் மதுபானக் கடைக்கு எதிராக சுவரில் பல விளம்பர(போஸ்டர்) ஊர் பொதுமக்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தனியார் மதுபானக் கூடம் இயக்கப்பட பல கட்டிட வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதனால் தனியார் மதுபான பார் நடத்த அனுமதிக்க கூடாது என பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் நடத்தி வருகின்றனர்.








