• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மாணவர்கள் தங்கம் வெள்ளி வென்று சாதனை..,

ByKalamegam Viswanathan

May 29, 2025

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் மதுரை திருமங்கலத்தினை சேர்ந்த 20 மாணவ மாணவியர்கள் பங்கேற்று தங்கம் வெள்ளி வெண்கலம் என ,மொத்தம் 27 பதக்கதங்களை வென்று சாதனை படைத்தனர்.

உலக பாரம்பரிய சோட்டோகான் கராத்தே சம்மேளனம் சார்பில் 23வது தேசிய கராத்தே போட்டி கோவா மட்கான் மனோகர் பாரிக்கர் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம், திருமங்கலத்தினை சேர்ந்த 20 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

இதில், 11 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சண்டை பிரிவில் ஜெய்சாய் ஸ்ரீ தங்கம் பதக்கமுகம் கட்டாபிரிவில் வெண்கலம் பதக்கமும் வென்றனர். 7 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவன் அஸ்வந்த் சாய் வெண்கலம் பதக்கமும் சண்டை பிரிவில் வெண்கலம் வென்றார். 8 வயதிற்குட்பட்டோருக்கான கட்டாபிரிவில் திருமங்கலம் சுந்தராஜபுரத்தைச் சேர்ந்த கோட்டை திருப்பதி என்பவரின் மகன் அஜய் இரண்டு வெள்ளிப்பதக்கமும், சண்டை பிரிவில் தங்கம் பதக்கமும் வென்றார்.

8 வயதிற்குபட்டோருக்கான பிரிவில் கார்த்தி சண்டைபிரிவில் வெண்கலம் பதக்கம் வென்றார். 11 வயது பிரிவிற்கான கட்டாபிரிவில் ஸ்ரீ சாத்விக் வெள்ளி பதக்கம் வென்றார். இதே பிரிவில் மாணவர் கோபாலகிருஷ்ணன் வெண்கலம்
வென்றார். 12 வயதுக் குட்பட்டோருக்கான பிரிவில் சரவணபிரதீப் சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கமும், கேசவன் வெண்கலம் பதக்கமும் வென்றார்.

11 வயது மாணவியர்கள் பிரிவில் கட்டாபிரிவில் ஜெய்சாய் ஸ்ரீ வெண்கலம் வென்றார். 20 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பாலமுருகன் கட்டா பிரிவில் தங்கமும், குழு கட்டாவில் வெண்கலமும் வென்றார். பயிற்சி யாளர்களுக்கான பிரிவில் சென்சாய் கண்ணன் சண்டைபிரிவில் தங்கமும், சென்சாய் பொன்னுசாமி கட்டாபிரிவில் வெண்கலமும், சண்டை பிரிவில் வெள்ளியும் வென்றனர். சென்சாய் திருப்பதி கட்டா மற்றும் சண்டைபிரிவில் வெண்கலம் வென்றார்.

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்த போட்டியில் திருமங்கலம் பகுதி மாணவ மாணவியர்கள் மொத்தம் 5 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர். நேற்று முன்தினம் காலை திருமங்கலம் வந்த மாணவ மாணவியர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெற்ற பெற்றவர்களுக்கு தலைமை பயிற்சியாளர் ஷிகான் சத்ரஜித் சவுத்ரி பரிசுகளை வழங்கினார்.