• Wed. Jun 26th, 2024

தேசிய கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை

ByNamakkal Anjaneyar

Jun 18, 2024

கடந்த ஞாயிறு அன்று காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை கர்நாடகா மாநிலம் மைசூர்ல் ஜிம்னாசியம் ஹால் ஸ்போர்ட்ஸ் பெவிலியன், (மைசூர் பல்கலைக் கழகம்) அரங்கில், கோஜூ வாரியர்ஸ் கப் -2024 ஓப்பன் நேஷனல் கராத்தே சாம்பியன்ஷிப்-2024 ஆர்கனைசிங் கராத்தே டோ கோஜூகான் அசோசியேசன்
சார்பில் கராத்தே போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி கோஜூகான் கராத்தே தலைமை பயிற்சியாளர் & பிரஸிடென்ட்
கியோஷி மது விஸ்வநாத் 7-வது டிகிரி பிளாக்பெல்ட் ஜப்பான் தலைமையில் கியோஷி சி.எஸ்.அருண்மச்சையா தலைவர் அக்கில்லா கர்நாடக ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேசன் சென்செய் மிருதுளாமது AKF (ASIAN KARATE FEDERATION) ஆகியோரின் முன்னிலையிலும், சென்செய் எம்.ஆர்.வெங்கடேஷ் கர்நாடக மாநிலதலைவர் கோஜூகான் அசோசியேசன், சென்செய் எஸ்.தீபக்குமார் கர்நாடக மாநில செயலாளர் கோஜூகான் அசோசியேசன் சென்செய் எஸ்.ரோஹித் கர்நாடக மாநில பொருளாலர் கோஜூகான் அசோசியேசன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கோஜூகான் அசோசியேசன் தமிழ்நாடு, சென்செய்சிந்தியா கே.பாபு மாநில செயலாளர் கோஜூகான் அசோசியேசன் மற்றும் கராத்தே மாஸ்டர்கள்& மாணவ, மாணவியர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு – நாமக்கல் மாவட்டம் சார்பாக எட்டெர்னல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இருந்து 12 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கட்டா பிரிவில் கனிஷ்கா, கவி ஸ்ரீ முதல் இடத்தையும் சண்டை பிரிவில் முகுந்தன், கிஷோர், கோபிகிருஷ்ணன் முதலிடத்தையும் எடுத்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் வழக்கறிஞர் டி. சுரேஷ்பாபு பாராட்டி, மாணவர்களை ஊக்கமளிக்கும் விதமாக மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் தற்காப்பு முறைகளைப் பற்றி விளக்கம் அளித்தார். மேலும் தலைமை பயிற்சியாளர் சிந்தியா பாபு-யும், பயிற்சியாளர் வினோத்-யும் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் 17வது வார்டு கவுன்சிலர் திவ்யா வெங்கடேசன், 3வது வார்டு கவுன்சிலர் செல்வி ராஜவேல், 26 ஆவது வார்டு சேகர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். எட்டெர்னல் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் சிந்தியா பாபு வெற்றி பெற்ற மாணவர்களை மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *