மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்து வருகிறது

குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் குழந்தைகளை அச்சுறுத்தும் விதமாக குறுக்கும் நெறுக்கமாக ஓடுவதும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு குறைப்பதுமாக ஒருவித அச்சத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது
இதன் உச்சகட்டமாக ஐந்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் மொத்தமாக சேர்ந்து வணிக நிறுவனத்திற்குள் நுழைவதும் அங்குள்ள பொருள்களை சேதப்படுத்துவதுமாக வணிகர்களிடத்தில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள தனியார் மொபைல் நிறுவனத்தில் நுழைந்த ஐந்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் நிறுவனத்தின்
உள்ளே நுழைந்து ஹாயாக படுத்து உறங்குவதும் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதும் டேபிள் மீது ஏறி அமர்வதும் அங்குள்ள பொருட்களை எடுத்து வீசுவதும் கடைவீதி பகுதியில் வரும் பொது மக்களை ஆபத்தான முறையில் குறைத்து துரத்துவதுமாக பொதுமக்கள் அச்சப்படும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது

இது போன்று ஆபத்தான முறையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்













; ?>)
; ?>)
; ?>)