• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நிறுத்தப்பட்டதா பிக் பாஸ் லைவ் ஸ்ட்ரீம்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் எந்தவொரு ஒளிவு மறைவுமின்றி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டு களிக்கலாம் என்கிற அறிவிப்புடன் கடந்த ஜனவரி 30ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்கப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வரும் நிலையில், தற்போது திடீரென அதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக இந்த 24 மணி நேர லைவ் ஸ்ட்ரீமிங் நிறுத்தப்பட்டுள்ளதாக பிக் பாஸ் குழு அந்த லைவ் ஸ்ட்ரீம் வீடியோவிலேயே அறிவித்துள்ளது.

ஒடிடி தளம் என்பதால் இதுபோன்ற பிரச்சனை வருவது சாதாரண விஷயம் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

ஆனால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, லைவ் கிடையாது என்றும், ஒரு நாள் அல்லது ஒரு சில மணி நேர இடைவெளியில் தான் நிகழ்ச்சி ரன் ஆகும் என்றும் deferred live வீடியோ தான் ஒளிபரப்பாகி வருகிறது என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்!

இது ஒரு புறம் இருக்க, உள்ளே போட்டியாளர்களுக்கு இடையே ஏதாவது பிரச்சனையா அல்லது சண்டை ஏற்பட்டு விட்டதா? திடீரென பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை வார இறுதியில் நிறுத்தி விட்டு யாரையாவது வெளியே அனுப்ப போகிறார்களா? என ஏகப்பட்ட கேள்விகளை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

திருநங்கை போட்டியாளரான நமீதா மாரிமுத்துவை வெள்ளிக்கிழமை நடந்த சண்டையில் அவ்வாறு வெளியே அனுப்பினார்கள். அந்த காட்சிகளை ஒளிபரப்பவே இல்லையே என்றும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இதற்கான விளக்கத்தை பிக் பாஸ் குழு கொடுக்கும் அல்லது உடல் நலம் சரியில்லாமல் யாராவது வெளியேற்றப்படுவார்கள் என்றும் விளாசி வருகின்றனர்.

மேலும், முதல் வாரத்திலேயே தொழில் நுட்பக் கோளாறு என்றால் 70 நாட்கள் பிக் பாஸ் ஒடிடி தாக்குபிடிக்குமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.