• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எஸ்.டி.பி.ஐ. ஆதரித்த பாரத் பந்த் – போலீசாருக்கும் கட்சியினருக்கும் ஏற்ப்பட்ட மோதல்

Byமதி

Sep 27, 2021

ஒன்றிய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்று நாடு தழுவிய பாரத் பந்த் நடைபெறுகிறது. இதை ஆதரித்து எஸ்டிபிஐ கட்சியின் மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக, தெற்கு வாசலில் சாலை மறியல் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சாகுல்அமீது முன்னிலை வகித்தார். மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தெற்கு தொகுதி துணைத் தலைவர் சாகுல் ஹமீது, மத்திய தொகுதி தலைவர் ஷேக் இப்ராஹிம், திருப்பரங்குன்றம் தொகுதி தலைவர் ஜமீர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாலை மறியலின் போது போலீசாருக்கும் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனவே, நடுரோட்டில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சுழல் நிலவியது.