பெரும் தலைவரின் தொண்டன் பொன்னப்பா நாடாருக்கு நாகர்கோவிலில் சிலை அமைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தை கட்டி காத்து பலமான அஸ்திவாரம் அமைத்த அன்றைய காங்கிரஸ் கட்சியினர்களில் மிக முக்கியமான பணி, பங்கு ஐயா பொன்னப்பா நாடாருக்கும் உண்டு என்பது வெறுமனே ஆன சொல் அல்ல உண்மையிலே அவரது தனித்த பெருமை.
கேரள மாநிலம் திருகொச்சி சட்டமன்றத்திற்கு, குமரியின் விளவங்கோடு சட்டமன்றத்திலிருந்து முதல் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைக்கப்பட்டபின். குமரியின் பல்வேறு தொகுதிகளில் இருந்து 4_ங்கு முறை வெற்றி பெற்றார்.
கலைஞர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் சட்டமன்ற எதிர் கட்சி தலைவராக இருந்த போது, அரசின் எந்த சலுகைகளையும் பெற்றுக் கொள்ளவில்லை.
நாகர்கோவிலில் நீதிமன்றத்திற்கு சற்று தொலைவில் தான் அவரது இல்லம் இருந்தது. நீதி மன்றத்திற்கு குடை பிடித்தபடி தினம் தோறும் நடந்தே செல்வது அவரது வாடிக்கையாக இருந்தது.
1976_விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அதே விமானத்தில் பயணம் செய்த, திரைப்பட நடிகை ராணிசந்திராவு மரணம் அடைந்தார். அதே விமானத்தில் பயணம் செய்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலட்சுமி சிகிச்சைக்கு பின் குணமானார்.

பொன்னப்பா நாடார் முதல் முதலாக வெற்றி பெற்ற விளவங்கோடு தொகுதியே அவர் வெற்றி பெற்ற கடைசி தொகுதியும், பொன்னப்பா நாடார் மரணம் அடைந்த அந்த காலத்தில் இவரது மூத்த மகன் பொன். விஜயராகவன் சென்னை சட்டக் கல்லூரி மாணவர். கால ஓட்டத்தில் பொன் விஜயராகவனும் பின்னாளில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்று,இன்றைய சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் ராஜேஷ் குமார், பொன்னப்பா நாடாரின் உடன்பிறந்த அக்காளின் மகன்.
ஐயா பொன்னப்பா நாடார் மீது குமரி மாவட்ட மக்களின் பெரும் நன்றி கடன் போன்று, அவரது குடும்பத்து வாரிசுகள்,பொது மக்களின் பிரதிநிதி என்ற உரிமையுடன் மக்கள் பணி செய்வது என்பது கிடைத்தற்கரிய பெருமை.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் மக்களுக்கு கொடுத்துள்ள தனித்த மிகுந்த பெருமையாக, பொன்னப்பா நாடாரின் நூற்றாண்டினை கெளரவிக்கும் வகையில் நாகர்கோவில் பகுதியில் பொன்னப்பா நாடாருக்கு நாகர்கோவிலில் சிலை அமைக்க இருப்பது மிகவும் பாராட்டு மிக்க செயலுக்கு நன்றி சொல்லும் வகையில், முதல்வர் ஸ்டாலினை திருவாளர்கள் பொன். விஜயராகவன், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோ தங்கராஜ், தாரகை கத்பட், நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயர் மகேஷ் ஆகியோர் கூட்டாக சென்று நன்றி தெரிவித்துள்ளனர்.
குமரி அன்றும், இன்றும் காங்கிரஸ் கோட்டை என்பதின் அஸ்திவாரமாக இவர்களது பொதுப்பணிகள்.