மாநில அளவிலான பெண்களுக்கான கபாடி போட்டி நாகப்பட்டினத்தில் தொடங்கியது.
அலைகடல் கபாடி கழகம் சார்பில் மாநில அளவிலான பெண்களுக்கான கபாடி நாகப்பட்டினம் அவுரித்திடலில் தொடங்கியது. இதில் சென்னை, சேலம், நாமக்கல், கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறையை சேர்ந்த 17 அணிகள் பங்கேற்றது.
விறுவிறுப்பாக நடந்த முதல்சுற்று லீக் போட்டியில், சென்னை கண்ணகி நகர் அணியும், அதனை எதிர்த்து நாமக்கல் விவகானந்தா அணியினரும் விளையாடினர்.

ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே நடந்த கபாடி போட்டியில் நாமக்கல் அணியினரை தோற்கடித்து, சென்னை கண்ணகிநகர் கபாடி அணியினர் 10-42- புள்ளிகள்பெற்று வெற்றி பெற்றனர். அதனை தொடர்ந்து சேலம் அணியினரும், மயிலாடுதுறை சாய் அணியினரும் மோதினர். இதில் சேலம் அணியினர் 15-25 வெற்றி புள்ளிகள் எடுத்து, மயிலாடுதுறை சாய் அணியினரை 10,புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர்.

இதேபோல் 9, புள்ளிகள் பெற்ற நாகப்பட்டினம் அணியினரை வீழ்த்தி, அந்தியூர் சக்தி பிரதர்ஸ் கபாடி அணியினர் 40 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றனர். தொடர்ந்து போட்டிகள் நடைபெறுகிறது. நள்ளிரவு இறுதி போட்டி நடைபெறும்.







