• Tue. Feb 17th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

திருநகரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆக்கி போட்டி..,

ByKalamegam Viswanathan

Feb 17, 2026

மதுரை திருநகர் அண்ணா பூங்காவிளையாட்டு மைதானத்தில் திருநகர் ஆக்கி கிளப் சார்பில்மறைந்த ஆக்கிவீரர்கள் பாலசுப்பிரமணியன், ஜெய்சிங் ,பழனியாண்டவர் ,மெய்யப்பன் ஆகியோர்களது நினைவு சுழற்கோப்பைக்கான 27 வது ஆண்டு ஆக்கி போட்டி நாக் அவுட் முறையில் .நடைபெற்றது.

கடந்த ஒரு வாரமாக காலை மற்றும் மாலை வேளையில் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து 30அணிகளின் வீரர்கள் களம் இறங்கி உற்சாகமாகவிளையாடினர்கள். தமிழ்நாடுகாவல்துறை அணி சாம்பியன் இதில் இறுதியாக தமிழ்நாடு காவல்துறை அணி வீரர்களும், வணிகவரி துறை அணி வீரர்களும் (ஜி.எஸ்.டி.துறை அணி)விறுவிறுப்பாக விளையாடினார்கள்,

அதில் 5 – 3-கோல்கணக்கில் தமிழ்நாடுகாவல்துறை அணி வென்று சாம்பியன் ஆனது. வணிக வரிதுறை அணி (ஜி.எஸ்.டி.துறை அணி) 2-வது இடத்தை பிடித்தது. 3-வது இடத்தினை கோவில்பட்டி எக்ஸ்லேண்டுஅணியும், 4-வது இடத்தில் சென்னை மாநகர் காவல் துறை அணியும் வென்றுபரிசை தட்டி சென்றது. விளையாட்டு போட்டியை தொடர்ந்து பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆக்கி கிளப் சங்க செயலாளர் திருநகர் ரமேஷ் தலைமை தாங்கினார்.மதுரை மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் ராஜா,மதுரை மாவட்ட ஆக்கிகிளப் சங்கத் தலைவர் ஏ.ஜி. கண்ணன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கிருத்திகாதங்கப்பாண்டி கலந்து கொண்டு ஆக்கிபோட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார் . நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.