• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டியில் சுமைதூக்குவோர் பாதுகாப்பு மாநில பொதுக்குழு கூட்டம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நேற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக சுமைதூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக சுமைதூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று ஆண்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் வீரராகவன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் 49 ஆண்டு காலமாக தினக்கூலிகளாக உள்ள சுமைப்பணித் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும், சங்க அங்கீகார தேர்தலை உடனே நடத்த வேண்டும், தொழிலாளர்களின் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இதில் மாநில தலைவர் வீரராகன் பத்திரிகையாளர்களிடம், தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கை மனுவை அரக்கோணத்தில் இருந்து சென்னை தலைமை செயலகம் வரை நடைபயணமாக சென்று முதலமைச்சரிடம் மனு அளிக்க உள்ளோம் என்றார்.

மேலும் இந்த கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் சரவணன், மாநில பொருளாளர் பாஸ்கரன், மாநில துணைத் தலைவர் தனபாலன், மாநில துணை செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை ஆண்டிபட்டி சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.