• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

ByJawahar

Jan 22, 2023

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் மரு.த.இராசலிங்கம் தலைமையில், மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணைத் தலைவர் முனைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
நிகழச்சியின் தொடக்கத்தில் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி 10 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ வரவேற்றார்.மாநில பொதுச் செயலாளர் எல்.பாஸ்கரன் இயக்க செயல் பாடுகளைப் பற்றியும், தொடக்கவுரை ஆற்றினார். கூட்டத்தின் தீர்மானங்களை கூறினார்.பெரம்பலூர் மாவட்டம் சிவக்குமார், வெங்கடாசலம் ,ரமேஷ், வைரமணி, கரூர் மாவட்டம் சுகுமார், முத்து, தூத்துக்குடி மாவட்டம் கந்தசாமி, வன்னியராஜா, தஞ்சை மாவட்டம் முருகானந்தம், ஜோசப் அமல்ராஜ், புதுக்கோட்டை மாவட்டம் ஆனந்தராஜ், கணேசன், செல்வகுமார் , மதுரை மாவட்டம் சேகர் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.முடிவில் மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் நன்றி கூறினார்.நிகழ்வில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்