விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கன் குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மகேஸ்வரி முன்னிலை வகித்தார் .சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் வடிவேல் வரவேற்று பேசினார்.

முகாமில் துலுக்கன்குறிச்சி ,அலமேலுமங்கைபுரம், மேலச்சத்திரம், அன்னபூரணியாபுரம், உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மகளிர் உரிமைத் தொகை மனுக்கள் 108 உள்பட 255 மனுக்கள் அளித்தனர். மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமில் , பல்துறை அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். துலுக்கன்குறிச்சி வருவாய் ஆய்வாளர் மகேஸ்வரன் நன்றி கூறினார்.