தமிழக அரசின் மக்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட மகாராஜபுரம் ஊராட்சியில் நடைபெற்றது.

இம்முகாமினை வட்டார மருத்துவ ஆலோசனைக் குழு உறுப்பினரும், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான பா.பாபு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) புஷ்பரதி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தாசில்தார் (கேபிள் டிவி) பாபு ரமேஷ், ஊராட்சி செயலாளர்கள் சிவசங்கரி, காளியப்பன், மேலாளர் ஆனந்த விஜயன், ஒன்றிய திமுக துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், கிளை பிரதிநிதிகள் சுப்பையா, மணிகண்டன், வார்டு செயலாளர் சீதாராமன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ரவீந்திரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத், அனைத்து துறையின் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
