தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நெய்வாசல் ஊராட்சி சின்னப்பொன்னாபூர் ஊராட்சி தலையமங்கலம் ஆகிய ஊராட்சி சார்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் மெய் வாசல் சமத்துவபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது
இதில் ஒரத்தநாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் கிருஷ்ணசாமி நெய்வாசல் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அசோக்குமார் தி மு க ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்

இந்த முகாமில் மாற்றுத்திறனாளி நலத்துறை, காவல்துறை, வேளாண் துறை, தொழிலாளர் மற்றும் அமைப்பு சாராத்துறை, கூட்டுறவுத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மின்சார நல வாரியம், மற்றும் 46 அரசு நலத்துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று தீர்வு காண வேண்டிய மனுக்களுக்கு உடனடியாக தீர்வு அளித்தனர் இந்த நிகழ்ச்சியில் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டு மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். இதில் தஞ்சாவூர் மாவட்ட கலால் உதவி ஆணையர் ரேணுகாதேவி ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பெறப்படும் மனுக்களுக்கு ரசீதுகள் வழங்கப்படுகின்றனவா என்று ஆய்வு செய்தனர்
இந்த நிகழ்ச்சியை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ராஜா, விஜய், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், நெய்வாசல் ஊராட்சி செயலாளர் விஜய் சின்ன பொண்ணா பாரு ஊராட்சி செயலாளர் சித்தர்கள் தலையாமங்கலம் ஊராட்சி செயலாளர் அனுசுயா ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்கின்றனர்.