குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக,குமரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்து , ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி,மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ‘ஸ்டாலின்’மக்களின் பிரச்சினை மற்றும் மகளீர் உரிமை தொகை சம்பந்தமான மனுக்கள் பெற்று தகுதியுடைய மனுதாரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றும் நிகழ்வு தமிழகத்தில் அனைத்து நிலை மக்களின் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பஞ்சாயத்தில் உள்ள ‘தென் கோவை திருமணமண்டபத்தில்’ இன்று (செப்டம்பர் 3)ம் நாள்,பொதுமக்களின் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.

கோவளம் புனித இன்னாசியார் ஆலய பங்கு தந்தை,துணை பங்கு தந்தை தோவாளை வட்டாட்சியர், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்கள். மாலை 5_மணி வரை இந்த மக்கள் மத்தியில் மனுக்கள் வாங்கப்படும்.














; ?>)
; ?>)
; ?>)