மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தலைமையில், ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தெரிவித்ததாவது:-
பொது மக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் சேவைகள் வழங்குவதன் மூலம் தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு தேவையான சேவைகள் அனைத்தையும் அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்ப்பதை கருத்திற்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் 25.04.2025 அன்று சட்டமன்றத்தில் மாநிலம் முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படும் என்றும், ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைந்து, தகுதியான திட்டப் பலன்கன் மற்றும் சேவைகளை குடிமக்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்குவதாகவும். இந்த முகாம்களில் போது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான தகுதியுள்ள விடுபட்ட பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் அறிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் முதல்வரின் முகவரித்துறை ”உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டத்தை வழங்கியுள்ளது.
”உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படும். குடிமக்களுக்கு சேவைகள் மற்றும் திட்டங்களை வழங்கி, குடிமக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உதவுகின்றன. மேலும், இம்முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (KMUT) திட்டத்தில் தகுதியுடைய பெண்கள் மற்றும் முந்தைய கட்டத்தில் விடுப்பட்ட பெண்கள் ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் கலந்து கொண்டு அதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கவுண்டரில் நியமிக்கப்பட்ட இல்லம் தேடி கல்வி (ITK) தன்னார்வலர்கள் மூலம் இணையத்தில் மூலம் பதிவு செய்யப்படும். ” உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் மாநகராட்சி என்றால் மூன்று வார்டுகளுக்கு இரண்டு முகாம்கள், நகராட்சி என்றால் ஐந்து வார்டுகளுக்கு இரண்டு முகாம்கள், பேருராட்சி என்றால் ஒரு பேருராட்சிக்கு இரண்டு முகாம்கள், கிராம பஞ்சாயத்து என்றால் 10000 மக்கள் தொகை வீதம் ஒரு முகாம், மாநகராட்சி ஒட்டியுள்ள பெரிய கிராம பஞ்சாயத்துகளுக்கு இரண்டு முகாம்கள் என்ற அடிப்படையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
”உங்களுடன் ஸ்டாலின் ” திட்டம் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்அடிப்படையில் அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளடக்கிய திட்டம் நடத்திட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீலை 2025 முதல் நவம்பர் 2025 வரை மொத்தம் 347 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 15.07.2025 முதல் 14.08.2025 வரை 120 முகாம்களும், 15.08.2025 முதல் 14.09.2025 வரை 96 முகாம்களும், 15.09.2025 முதல் 14.10.2025 வரை 96 முகாம்களும், 15.10.2025 முதல் 15.11.2025 வரை 35 முகாம்களும் என்ற அடிப்படையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நகர்புற மற்றும் கிராமப்புற அனைத்து பஞ்சாயத்து பகுதிகளில் 15.07.2025 முதல் ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம் மாநகராட்சி பகுதிகளில் 20 முகாம்களும், நகராட்சி பகுதிகளில் 15 முகாம்களும், பேரூராட்சி பகுதிகளில் 9 முகாம்களும், ஊராட்சி பகுதிகளில் 76 முகாம்களும் முதற்கட்டமான நடத்தப்படவுள்ளது. நகர்புற மற்றும் கிராமப்புறங்களில் நடத்தப்படும் ”உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில்” சேவைகள் அந்தந்த துறைகளால் வழங்கப்படும். நகர்புறங்களில் நடத்தப்படும் முகாம்களில் 13 துறைகளின் மூலம் 43 சேவைகளும், கிராமப்புறங்களில் நடத்தப்படும் முகாம்களில் 15 துறைகளின் மூலம் 46 சேவைகளும் வழங்கப்படும்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் தாட்கோ கடனுதவிகள் மற்றும் கல்வி உதவித்தொகை, தூய்மைப்படுத்தும் தொழிலாளர் நல வாரியம், வீட்டுமனை / இணையவழி பட்டா பெறுவதற்கான விண்ணப்பம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் வாயிலாகவும், டாம்கோ/டாப்செட்கோ கடனுதவிகள், உதவித்தொகைக்கான விண்ணப்பம் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை வாயிலாகவும், PDS பெயர்கள் திருத்தம்/ முகவரி மாற்றம், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன்கள் பெறுவதற்கான விண்ணப்பம் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வாயிலாகவும், புதியமின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றம் மற்றும் கூடுதல் மின்பளு கட்டணங்கள் தொடர்பான விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வாயிலாகவும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கான விண்ணப்பம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் வாயிலாகவும், ஆதார் சேவைகள் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் வாயிலகவும், கட்டுமான வரைபட ஒப்புதல்/ நில உபயோக மாற்றத்திற்கான ஒப்புதல் பெறுவதற்கான விண்ணப்பம் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை வாயிலாகவும், உறுப்பினராக பதிவு செய்தல், கூடுதல் விவரங்கள் சேர்த்தல், புதுப்பித்தல் விண்ணப்பம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வாயிலாகவும், தொழில்முனைவோருக்கான கடனுதவி (DIC), NEEDS, PMEGP, UYEGP மற்றும் அண்ணல் அம்பேத்கரின் வணிக திட்டம் குறித்த விண்ணப்பங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை வாயிலாகவும்,
சொத்துவரி, குடிநீர் வசதி, உரிமங்கள் மற்றும் அனுமதி, கழிவு நீர் இணைப்பு, அடிப்படை வசதிகள் பராமரிப்பு, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், காலி நில வரி, தெரு வியாபாரி அடையாள அட்டை, சொத்துவரி பெயர் மாற்றம், மற்றும் கட்டிடம் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வாயிலாகவும், பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் பட்டா பெயர் திருத்தம், பட்டா/ சிட்டா நகல், பிறப்பு/ இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்/ஜாதிசான்றிதழ்/
வருமான சான்றிதழ்/ இருப்பிட சான்றிதழ் மற்றும் இதரசான்றிதழ்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவித்தொகைகள் குறித்த விண்ணப்பங்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வாயிலாகவும், பெண்குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம் மற்றும் ஆதரவில்லாத உதவித்தொகைகள் பெறுவதற்கான விண்ணப்பம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வாயிலாகவும், மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் காதுகேட்கும் கருவி, இதர உதவி உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான கடன்கள் குறித்த விண்ணப்பங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாகவும் பெறப்படவுள்ளது.
கிராமப்புறங்களில் நடைறும் முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான விண்ணப்பங்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள 13 துறைகளிடமும், நுண்ணீர்ப்பாசனம் மற்றும் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மற்றும் விவசாய இயந்திர மாக்கல் மற்றும் இ-வாடகை குறித்த விண்ணப்பங்களை வேளாண்மை-உழவர் நலத்துறையிடமும், புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் மற்றும் சிறிய அளவிலான நாட்டுக் கோழிப் பண்ணை, மீன் வளர்ப்பு திட்டம் (250/அலகு) 50 சதவீத மானியத்தில் நிறுவுதல் குறித்த விண்ணப்பங்களை கால்நடைபராமரிப்புத்துறையிடமும் வழங்கி பயன்பெறலாம். இத்துறைகள் மூலம் வழங்கப்படும் சேவைகள் குறித்து பொதுமக்கள் அளிக்கப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்டனர்.