• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்..,

ByT. Balasubramaniyam

Feb 2, 2026

அரியலூர் ரயில் நிலையத்தில் உள்ள சீனியர் செக்‌ஷன் என்ஜினீயர் அலுவலகம் (நிரந்தர வழி) முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யூ. அரியலூர் கிளை செயலாளர் த. செல்வகுமார் தலைமை தாங்கினார். கிளை உதவி செயலாளர் எம். ரகு ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். உதவி செயலாளர்கள் வி. கண்ணன், பி. சிவக்குமார், ஏ. மணிவேல், மகளிர் அணி தலைவி ஜெ. சுகன்யா, கிளை பொருளாளர் எம். கார்த்திக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில்,2004-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கல், அனைத்து பாதுகாப்பு பிரிவுகளுக்கும் Risk & Hardship Allowance வழங்கல், PLB மற்றும் Night Duty Allowance-க்கு விதிக்கப்பட்ட உச்சவரம்புகளை ரத்து செய்தல், 8-வது சம்பளக் கமிஷன் பணிகளை விரைவுபடுத்தல், காலியிடங்களை உடனடியாக நிரப்பல், ஆட்குறைப்பு மற்றும் தனியார்மய முயற்சிகளை கைவிடல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்கத்தின் துணைத் தலைவர் எஸ். வீரமுத்து நன்றி கூறினார்.