மதுரை கோரிப்பாளையம் நாடார் உறவின்முறைக்கு பாத்தியமான நூற்றாண்டு கண்ட ஸ்ரீமாரியம்மன் மற்றும் சித்தி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை கோரிப்பாளையம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான நூற்றாண்டு கண்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மற்றும் சித்தி விநாயகர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இரண்டு கால யாகசாலை பூஜை பூஜைகளில் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் வைக்கப்பட்ட குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலயத்தை சுற்றி வந்து திரளான பக்தர்கள் சூழ ஆலயத்தின் கோபுரத்தில் உள்ள விமானங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டு செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷே விழா தலைவர் பாண்டியன், பொதுச்செயலாளர் சின்னச்சாமி, பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் விழாகுழு லட்சுமிநரசிம்மன்(என்ற)ராஜா ஐயர்க்கனி முருகானந்தம் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.