கரூர் கல்யாண வெங்கட்ரமண ஆலயத்தில் சுவாமி இன்று ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகன திருவீதி உலா காட்சி தந்து வருகிறார்.
இந்நிலையில் தெப்பத் திருவிழா மற்றும் தேர் திருவிழா நிறைவு பெற்ற நிலையில் மாசி மாத திருவிழா நாளைடன் முடிவடைகிறது. இதில் முக்கிய நிகழ்வாக இன்று ஆலய மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் காட்சி அளித்தார் .
ஊஞ்சல் சேவைகள் காட்சியளித்த சுவாமிக்கு ஆலயத்தின் பட்டாச்சாரியார்கள் துளசியால் நாமாவளிகள் கூறி தொடர்ந்து சுவாமிக்கு தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தி கும்ப ஆலாத்தியுடன் மகா தீபாரதனை காட்டினர்.
தொடர்ந்து நிகழ்ச்சியை காண ஆலயம் வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் துளசி மஞ்சள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இன்றைய நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.