• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீஅக்னி வீரன் சுவாமி ஸ்ரீ நல்லதங்காள் சுவாமி உற்சவ விழா

ByN.Ravi

Jul 28, 2024

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பேட்டை குளத்தில் அமைந்துள்ள அக்கினி வீரன் சுவாமி ஸ்ரீ நல்லதங்காள் சுவாமி உற்சவ விழா நடைபெற்றது. மதுரை பொன்மேனி கிராமத்தில் இருந்து அம்மன் அலங்கார பெட்டி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய ஊர்சேரி கிராமத்திற்கு நடைபயணமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் மறுநாள் காலை காலை 9.30 திண்டுக்கல் மாவட்டம் லிங்கவாடி அருகே உள்ள பேட்டைகுளம் ஸ்ரீ வித்யாகணபதி கோவில் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பின்னர் அக்கினி வீரன் சுவாமி நல்லதங்காள் சுவாமி கோவிலுக்கு பெட்டி கொண்டு செல்லப்பட்டு அன்று இரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 24.07.24. புதன்கிழமை அன்று அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. அடுத்த நாள் வியாழக்கிழமை அன்று அம்மன் அலங்காரப் பெட்டி பெரிய ஊர்சேரி கிராமம் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மதுரை பொன்மேனியில் உள்ள கோவில் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து அலங்காரப்பெட்டி கோவில் வீட்டில் வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது.