தேனி மாவட்டம் போடி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது 200 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது

இக்கோவிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கோவில் திருப்பணிகள் முடிவடைந்து உப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 9 கும்பு சமுதாயப் பொதுமக்கள் ஒன்றிணைந்து மகா கும்பாபிஷேக விழாவுக்கு ஏற்பாடு செய்தனர்
அதன் பின்பு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் பல்வேறு புண்ணிய நதியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள தீர்த்தங்களுக்கு யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக நான்கு கால கால யாக பூஜைகளான புண்யாகலசனம், வேத பாராயணம், நித்யதிருவாராதனம், ஹோமங்கள், மஹா சாந்தி ஹோமம், யுக்த ஹோமம், திருவாராதனம், துவாரகும்ப மண்டல ஸ்தாபகுதி , பூர்ணாஹிதி பூஜைகள் நடைபெற்றது
அதன் பின்பு மூலஸ்தானத்தில் உள்ள விமானக் கலசத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க புண்ணிய நீர்களை கொண்டு சென்று அங்கு விமான கலசத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
அதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள விமான கலசத்துக்கு புண்ணிய நீர் போன் நம்பர் விமான கலசத்தில் ஊத்தி மகா கும்பாபிஷேகம் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது அதன் பின்பு அன்போடு இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டனர்
அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீ வரதராஜ பெருமாள் சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மூலஸ்தானம் கோவிலில் இருந்து உற்சவர் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டனர் அதனைத் தொடர்ந்து உற்சவர் சன்னதியில் உள்ள விமான கலசத்துக்கும் புண்ணிய நீர் புத்தி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது
அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விமான கலசத்துக்கு மேல் கருட பகவான் வட்டமிட கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்
அதனைத் தொடர்ந்து மூலவரான மற்றும் உற்சவர் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு ஸ்ரீதேவி பூதேவி சாமிக்களுக்கு சிறப்பு தீபாரனைகள் நடைபெற்றது. இதில் உப்புப்கோட்டை மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்
அதன்பின்பு கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கிராம பொதுமக்கள் சார்பாக மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த அன்னதானத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவு அருந்தினர்.













; ?>)
; ?>)
; ?>)