மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அக்ரஹாரத்தில் காளங்கிநாதரின் சீடர் ஸ்ரீ குரு ராமச்சந்திர சுவாமிகள் 6 ஆவது குருபூஜை நடைபெற்றது. பிரம்ம ஸ்ரீ பாலமுருகன் சுவாமிகள் மற்றும் ரிஷி சிவம் குழுவினர் யாகசாலை வேள்வியை நடத்தினர்.

கணபதி பூஜை உடன் தொடங்கி ருத்ர ஹோமம் விசேஷ ஹோமங்கள் நடைபெற்று பூர்ணஹுதியுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் நிறைவுற்றது. தொடர்ந்து பால் தயிர் வெண்ணெய் நெய் மஞ்சள் பொடி மா பொடி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை சிற்றுண்டியும் மதியம் அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோகுல பாபா, சாய் முருகன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.








