கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவில் முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இன்று முக்கிய நிகழ்வாக ஏராளமான பெண் பக்தர்கள் ஆலய அருகே அமைந்துள்ள கிணற்றிலிருந்து அக்னி சட்டி, பால்குடம், தீர்த்தக்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வண்ண சீருடை அணிந்து சுவாமி கிணற்றிற்கு வந்து அடைந்த பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அக்னிச்சட்டி, பால்குடம், தீர்த்த குடைத்தினை தலையில் சுமந்தவாறு பக்தர்கள் ஊர்வலமாக வந்து கோவிலில் சுற்றி வலம் வந்த பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.