அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தா.பழூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வால்கோட்டை ஆஞ்சநேயர் ஆலய மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.

நேற்று கணபதி பூஜையுடன்தொடங்கிய மகா கும்பாபிஷேக விழாவானது, 2 கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு , அதனைதொடர்ந்து வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத மங்கள வாத்தியங்களுடன் தீபாராதனைகளுடன் இன்று காலை கடம் புறப்பாடு செய்யப்பட்டு , புனித கும்ப நீர் மூலவர் மற்றும் கோபுர விமானங்கள் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தேறியது.

விழாவில்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆலய திருப்பணிக்குழு நிர்வாகிகள் நா.நேருஜி, நே.ஜவகர் ஆகியோர் ஏற்பாட்டில் ,ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.