அரியலூர் மாவட்டம், தா.பழூர் – கும்பகோணம் நெடுஞ்சாலை ,எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும், அருள்மிகு ஸ்ரீ வால்கோட்டை ஆஞ்சநேயர் சுவாமி, (29 அடி உயரமுள்ள பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சுவாமி சிலை நிறுவ பெற்றுள்ள ) திருக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பாக நடைபெற்றது.இதனையடுத்து, தினசரி சுவாமிக்கு மண்டல பூஜைகள் நடைபெற்று வந்தன.

அதன் தொடர்ச்சியாக,மண்டல பூஜையின் கடைசி நாளான நேற்று (48 வது நாள் நிறைவு பூஜை ) , மங்கள வாத்தியத்தோடு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் 51 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, வால்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக செய்து , பின்பு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனைகள் நடந்தேறியது .

இந் நிகழ்ச்சியில் ,சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருப்பணிக்குழு கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டல பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் , திருக்கோயில் திருப்பணி குழு கமிட்டி நிர்வாகிகள் நா.நேருஜி, நே .ஜவகர் சிறப்பாக செய்திருந்தனர் .
