மதுரை மாவட்டம், பாலமேடு தெற்கூர் நாயுடு உறவின்முறைக்கு தனித்து பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் உற்சவவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த இந்த திருவிழாவில், முதல் நாளில் மறவபட்டி சென்று அம்மனை அழைத்து வருதல், பூசாரி வீட்டிலிருந்து நகைப்பெட்டி தூக்கி சென்று அம்மனுக்கு கண்திறந்து நகை அலங்காரத்துடன் அம்மன் ஆலயத்திற்கு அழைத்து வருதல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, நாயுடு உறவின்
முறை சங்கம், நாயுடு இளைஞர் சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டியினை சமுதாயப் பண்பாளர் எம்.ஆர்.எம். பாலசுப்பிரமணியன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார். பின்னர், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை பெற்ற பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு போட்டியில், கலந்துகொண்ட கேப்டன் குரூப்ஸ் நண்பர்கள் சிறப்பாக விளையாடியதற்கு பரிசு வழங்கப்பட்டது இரண்டாம் நாளில் முத்தாலம்மனுக்கு பொங்கல் வைத்து கிடாய் வெட்டி பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து, மூன்றாம்நாளில் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, தெற்கூர் நாயுடு உறவின்முறை சங்கம், இளைஞர் சங்கம் செய்து வருகின்றனர்.
