மதுரை கோவில் பாப்பாகுடி வசந்த நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

கோவில் பாப்பாகுடி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் சோணை தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். செயலாளர் கோபால், நிர்வாக குழு உறுப்பினர் கல்யாணக் குமார், பொருளாளர் செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர். நிகழ்வில் பகுதிவாழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.





