• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

கீரை. தமிழ்ச்செல்வனின் 29 ஆம் ஆண்டு நினைவு நாள்..,

Byமுகமதி

Mar 22, 2026

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்தவர் கீரை.தமிழ்ச்செல்வன். புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பாக கீரனூர் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தில் இருந்தது. திருச்சி மாவட்டம் என்பது இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியின் கடைசி எல்லையான மாங்காடு கிராமம் வரை இருந்தது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடிகள் வரிசையில் தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்ட தலைவர்களில் ஒருவராக கீரை. தமிழ்செல்வன் இருந்து வந்திருக்கிறார். பெரியார் அண்ணா மற்றும் கலைஞர் போன்ற தலைவர்களிடம் கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பயின்று திருச்சி மாவட்டத்தில் கட்சியை வளர்த்தவர். பிட்டர் புதுக்கோட்டை மாவட்டம் உருவான பின்பும் தனது கடைசி மூச்சு வரை கட்சிக்காக உழைத்தவர். கலைஞரின் நேரடி தொடர்பாக இருந்ததால் இன்றைய ஆளுமைகளுக்கெல்லாம் மூத்த ஆளுமையாக அரசியல் செய்து வந்தவர்.

அவர் மறைவுற்று 29 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது நினைவிடம் இருக்கும் சத்தியமங்கலம் கீரை தமிழ்ச்செல்வன் கல்லூரி வளாகத்தில் இன்று புதுக்கோட்டை மாவட்ட திமுகவை சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் இந்நாள் முன்னாள் எம்எல்ஏக்களும் கட்சியின் தொண்டர்களும் வந்து அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். அதற்கான ஏற்பாடுகளை கீரை தமிழ்ச்செல்வனின் மகன் கீரை.தமிழ்ராசா செய்திருந்தார்.