நாகப்பட்டினம்: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர், நடிகர் விஜய்யின் வருகையை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. நாளை நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், இந்த வழிபாடுகள் நடைபெற்றன.

இன்று (செப்டம்பர் 19, 2025) வெள்ளிக்கிழமை, கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் நாகப்பட்டினத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா பேராலயம், புத்தூர் அருள்மிகு ருத்திரபுரீஸ்வரர் ஆலயம், மற்றும் நாகூர் தர்கா ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று சிறப்புப் பிரார்த்தனைகள் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
