மதுரையில் ஆடி மாத முதல் வெள்ளி கிழமையை முன்னட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை ஜீலை:19, ஆடி மாதம் முதல் வெள்ளியையொட்டி இன்று மதுரையில் உள்ள அம்மன் கோவில்களில் பெண் பக்தர்கள் பெருந்திரளாக வந்து தரிசனம் செய்தனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், பொங்கல் மாவிளக்கு வைத்தும் செய்தும், ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதாலும், இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையை என்பதாலும் மதுரையில் அனைத்து அம்மன் கோயில்களிலும் இன்று காலை முதலே சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட தெப்பம் எதிரில் அமையபெற்ற அருள்மிகு வண்டியூர் மாரியம்மன் திருக்கோவிலில் இன்று அதிகாலை முதல் ஆயிரகணக்கான பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்தனர் மேலும் நாகதேவதை மற்றும் அரசமரம் விநாயகர் ஆகியோரை வழிபட்ட பக்தர்கள் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், ஆகியவற்றை வைத்து பூஜை செய்தும் மாவிளக்கு படைத்தும், பக்தர்களுக்கு கூழ் வழங்கியும் பெண்கள் சிறப்பு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர் .
ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபடுவது மிகச் சிறந்த நற்பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம் என்பதாலும், அதுவும் அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் அம்மன் குளிர்ந்த மனதோடு கேட்கும் வரங்களை கொடுப்பாள் என்று நம்பிக்கை உள்ளதால் இந்த நாட்களில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
ஆந்த வகையில் இன்று ஆடி வெள்ளியை முன்னட்டு ஆயிரகணக்ளான பக்தர்கள் அம்மன் கோயில்களில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயில்களில் புக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்ட்டு இருந்தது.