• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாணவ, மாணவியர்கள் அதிக மதிப்பெண் பெறவேண்டி சிறப்பு யாகம்:

ByN.Ravi

Feb 24, 2024

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில், 10ம்,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி ஸ்ரீஹயக்ரீவர், சரஸ்வதி தேவிக்கு சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, லட்சுமி ஹயக்ரீவருக்கு பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம், புஷ்பங்களால் அலங்காரங்கள் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுத்தேர்வு எழுதும் ஏராளமான மாணவ, மாணவிகள் கல்லூரி மாணவர்கள் பலர் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். பின்னர், மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பேனா உள்ளிட்ட எழுது உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் ஐயப்ப, முருக பக்தர்கள் செய்திருந்தனர்.