தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் 51- வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் 500,நபர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆணைக்கிணங்க சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இ.சி.ஆர்.சரவணன் அறிவுறுத்தலின் படி சென்னை புறநகர் மாவட்டம் வடக்கு பகுதி 185- வது வட்டச் செயலாளர் சி.என்.பாலகுமாரன் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு உள்ளகரம் மதியழகன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி துலுக்காத்தம்மன் ஆலயத்தில் தளபதி விஜய் பெயரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 500- நபர்களுக்கு பிரிஞ்சி, சாம்பார் சாதம், கேசரி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஆர்.சதீஷ்,வட்ட துணைச் செயலாளர் எம்.அன்பு மற்றும் வல்சா மேரி,மைதிலி,சித்ரா, லக்ஷ்மி,மல்லிகா, கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.