• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜை

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் டிசம்பர் 6ம் தேதி ஏற்றப்பட உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு எவ்வித பிரச்சனைகளும் இன்றி சிறப்பாக நடந்தேற காவல்துறையின் சார்பில் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு காவல்துறையின் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், சிவனே மலையாக காட்சி தருவதாகவும், திருக்கார்த்திகை தீபத் திருநாள் அன்று ஜோதி வடிவாக காட்சி தருவதாகவும் ஐதீகம்.
2022ம் ஆண்டிற்கான திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம்
டிசம்பர் 06 ம் தேதி ஏற்றப்பட உள்ளது. இதற்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 27ஆம் தேதி (நேற்று) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத் திருவிழா துவங்குவதற்கு முன் திருவண்ணாமலை நகரின் காவல் தெய்வமாக விளங்கும் துர்க்கை அம்மன் உற்சவம் நடத்தப்படும். இந்த உற்சவம் நவம்பர் 24 ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீப திருவிழா வரும் 6ம் தேதி நடப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.