பெரம்பலூர் டவுன் சங்குபேட்டை 19 வார்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில், ஐப்பசி அமாவாசையையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஸ்ரீ முத்துமாரியம்மனை வன்ன மலர்களால் அலங்கரித்து மாலை அணிவித்து சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் செய்து, அம்மனை பெண்கள் மற்றும் மகளிர் குழுவினர். மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை சங்கு பேட்டை,19 வது வார்டு அன்னதான குழுவினர் முன்னின்று நடத்தினர்.
விழாவில் கோவில் நிர்வாக அறங்காவலர் கண்ணபிரான், கோவிலின் முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மாதம் தோறும் வரும் அம்மாவாசை, பெளர்ணமி நாட்களில் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
