• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கரூர் வாராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் சிறப்பு அபிஷேகம்

ByAnandakumar

Mar 5, 2025

கரூர் மினி பேருந்து நிலையம் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராஹி அம்மனுக்கு மாசி மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மனுக்கு மாசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு இன்று இரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி வாராஹி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள் ,சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராஹி அம்மனுக்கு நடைபெற்ற மாசி மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் கார்த்தி மற்றும் ஆலய நிர்வாகிகள் சார்பாகவும் சிறப்பாக செய்து இருந்தனர்.