சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள அதிமுக விருதுநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி,

அதிமுக கூட்டணியில் சேர இன்னும் பல கட்சிகளும், பல சமூக அமைப்புகளும் காத்திருக்கின்றன.
திமுக ஆட்சியை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோள்தான் நாட்டு மக்களிடமும் பல்வேறு அரசியல் கட்சி மத்தியிலும் எழுந்துள்ளது
திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் அதிமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கையோடுதான் அதிமுக தலைமை நோக்கி கூட்டணி கட்சிகள் படையெடுத்து வருகின்றன.
அப்படி இப்படி என சொல்வார்கள், எல்லா கட்சிகளும் அதிமுக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி பக்கத்தில் தான் அமரப் போகிறார்கள்,
அற்புதமான கூட்டணியை அமைத்துள்ள நிலையில் வரலாறு காணாத வெற்றியை அதிமுக கூட்டணி பெறும்.

அதிமுக பாஜக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெரும், பெரும்பான்மை பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க கட்சி நிர்வாகிகள் களப்பணி ஆற்ற வேண்டும்.
வெற்றியின் இலக்கை நெருங்கியுள்ளோம், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி கண்களுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே தெரியவில்லை என்ற சூழல் ஜனவரி மாதம் முதல் உருவாகிக்கொண்டே இருக்கிறது.
எதிரும் புதிருமாக இருப்பார்கள் என்ற எண்ணியவர்கள் ஏமாந்து போகும் அளவிற்கு பலமான கூட்டணியை அமைத்த பக்குவம் மிக்க தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார்.
விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போனதில்லை என்பதற்கு வரலாற்று சான்றாக அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் இருப்பதால் இக்கூட்டணி வலுவான வெற்றிக்கூட்டணியாக அமைந்திருக்கிறது.
எனவே வெற்றிக்களிப்பில் கலந்து கொள்ளும் எண்ணத்தோடு நிர்வாகிகள் அனைவரும் உத்வேகத்தோடு பணியாற்ற வேண்டும்.

எதிரிகள் களத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
அடுத்த குடியரசு தின விழாவில் நாம் அனைவரும் அரசு பிரதிநிதியாகவும், கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி தேசியக்கொடியேற்ற வேண்டிய காட்சியை நாம் பார்க்க வேண்டும்.
அதற்கு நமது மாவட்ட நிர்வாகிகளின் பங்களிப்பு நிரம்பிஇருக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் இரட்டை இலையின் தாக்கம் அதிகமாக உள்ளது, அது நம் மாவட்டத்தில் மின்னும் மேலும் அதிகரிக்க வேண்டும்.






