• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சோனு சூட் மீண்டும் களப்பணியில் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குகிறார்

கொரோனா கால நாயகன் யார் என்று கேட்டால் சின்ன குழந்தைகூட இந்தி நடிகர்சோனுசூட்டை கைகாட்டும் அந்த அளவுக்கு கொரோனா முதல் அலையில் இருந்து இப்போது வரைக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வழிகளில் உதவிக் கொண்டிருக்கிறார். வெளிநாட்டில் தவித்த மாணவர்கள், தொழிலாளர்களை விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வந்தது. மகள்களை ஏர்பூட்டி உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தது. மருத்துவ பணியாளர்களுக்கு தனது ஓட்டலை வழங்கியது உள்பட ஏராளமான பணிகளை செய்தார்.இரண்டாவது அலையில் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கினார். வேலை வாய்ப்புக்கான ஒருங்கிணைப்புகளை செய்தார்.

தற்போது பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குகிறார். பஞ்சாப் மாநிலம் மேகா பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள், மற்றும் சமூக சேவகர்களுக்கு ஆயிரம் சைக்கிள்களை வழங்கினார். இதன் மூலம் சுமார் 45 கிராமப்புற பள்ளி மாணவிகள் பயன் அடைந்தனர்இதுகுறித்து சோனுசூட் கூறியிருப்பதாது: பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையே உள்ள தூரம் அதிகமாக இருப்பதால், கடும் குளிரில் மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்வது சிரமமாக உள்ளது. இதனால் படிப்பை பாதியில் நிறுத்துவது அதிகரித்துள்ளது. அதனால் இந்த பணியை துவங்கி உள்ளேன். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தகுதியுடைய மாணவர்களைக் கண்டறிந்து சொல்ல வேண்டும். என்றார்.