விருத்தாசலம் அருகே கவணை கிராமத்தில் இறந்து போன தந்தையின் சடலம் முன்பு, மகன் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கவணை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் நேற்று வயது முதிர்வு காரணமாக உடல்நிலை குன்றி இறந்த போனார். இந்த நிலையில் அவரது இளைய மகன் அப்பு பிஎஸ்சி, எல்எல்பி பட்டதாரி வாலிபர். இவர் கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விஜயசாந்தி வயது 23 என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தனது தந்தை இறந்து போன நிலையில், அவரது சடலம் முன்பு அவருடைய பாதம் தொட்டு காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மணமக்களை ஆசீர்வாதம் செய்தனர்.