• Tue. Feb 17th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

தந்தை மரணத்தில் மர்மம் இருப்பதாக மகன் புகார்..,

ByKalamegam Viswanathan

Feb 17, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது தந்தை அகரமுத்து அகர முத்துவின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்த நிலையில் இவர் சோழவந்தான் பசும்பொன் நகரில் பிச்சையம்மாள் என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். பிச்சையம்மாவுக்கு ரங்கசாமி மருது என்ற மகன்களும் மருதுவின் மனைவி கோமதி ஆகியோரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு மணிகண்டனுக்கு தொலைபேசி மூலம் உங்களது தந்தை அகர முத்து மாரடைப்பால் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு சென்ற மணிகண்டன் தனது தந்தை அகர முத்து தூக்கு மாட்டிக் கொண்டு இறந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கழுத்தில் காயம் உள்ளதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதனால் தனது தந்தை அகரமுத்துவின் மரணத்தில் மர்ம இருப்பதாகவும் பிச்சையம்மாள் குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்ததாகவும் சோழவந்தான் போலீசாருக்கு புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார் பிணத்தை சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.