சோமன்ஸ் லெய்சர்ஸ் அன்ட் டூர்ஸ் டிராவல்ஸ் கோவையில் புதிய கிளையை துவங்கியது.
கேரளாவில் முன்னணி சுற்றுலா நிறுவனமான சோமன்ஸ் லெய்சர்ஸ் டூர்ஸ் அன் டிராவல்ஸ் நிறுவனம், 27 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்தியாவில் 8 வது கிளையை கோவையில் இன்று துவங்கியது.
சோமன்ஸ் லெய்சர்ஸ் டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.கே சோமன் இது குறித்து பேசுகையில்,
“தென்னிந்திய அளவில் எங்களது விரிவாக்க நடவடிக்கையாக கோவையில் புதிய கிளையை துவக்குவது எங்களை பரவசமடையச் செய்கிறது எனவும் கோவை மக்களின் மறக்க முடியாத பயண அனுபவத்தை தரவும், அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவதும் தான் எங்களது நோக்கம் என்றார். சர்வதேச அளவில் சுற்றுலா பயணங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன. ஐரேப்பா, அண்டார்டிகா கண்டங்களுக்கு செல்ல எங்களது பேக்கேஜ் மிகவும் நியாயமானதாகவும், அனைவருக்கும் ஏற்றதாகவும் இருக்கும்,” என்றார்.
கோயம்புத்துார் மக்களுக்கு புதிய சலுகை இப்போதே துவங்குகிறது எனவும் 2025 ம் ஆண்டு அன்டார்டிகா செல்ல புக்கிங் செய்யும் பயணிகளுக்கு அடுத்து வரும் 10 நாட்களுக்கு ஒருவருக்கு ஒரு லட்ச ருபாய் தள்ளுபடி சலுகை தரப்படுகிறது என்றார்.