• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு!!

BySeenu

Nov 17, 2025

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கோவை நகரத்தின் மையப் பகுதியில் அமைந்து உள்ளது. இது மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாக உள்ளது. இங்கு தினந்தோறும் உதவித் தொகை உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, குறைகேட்பு முகாமில் பங்கேற்க, மனு அளிக்க என ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழையது, புதியது என்று 2 கட்டடங்கள் உள்ளன.

இதில் புதிய கட்டடத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் அறைகளும், குடிமைப் பொருள் வழங்கல் துறை, கனிம வளத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. பழைய கட்டடத்தில் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம், சமூக நலத் துறை, நில வரித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் அலுவலர்கள்யின்றி இருந்தது. இதனை அடுத்து அங்கு வந்த இரண்டரை அடி நீளம் கொண்ட சாரை பாம்பு அங்கு இருந்த சமூக நலத்துறை அலுவலகத்தில் இருந்ததை கண்ட ஊழியர்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக மத்திய தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் சமூக நலத் துறை அலுவலகத்தில் உள்ள பேட்டரி வைக்கும் பகுதியில் பதுங்கி இருந்த அந்தப் பாம்பை லாபகமாக பிடித்து கொண்டு சென்றனர். இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு புகுந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.