சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் போட்டி உற்சாகமாக நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20 குழுக்கள் மொத்தம் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிலக்கரி அமைச்சகம் மற்றும் சர்வதேச அமைச்சகங்கள் முன்வைத்த பிரச்சனைகளுக்கு சாப்ட்வேர், ஹார்ட்வேர் வழியில் தீர்வு காணும் திட்டங்களை மாணவர்கள் முன்வைத்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் துணை தலைவர் அபேய் ஜெரி, குழுக்களின் திட்டங்களை நேரில் பார்வையிட்டு பாராட்டினார். மேலும் 200 மாணவர்களுக்கு உலக மின் பொறியாளர் சங்கம் மூலம் ₹5000 மதிப்புள்ள உறுப்பினர் அட்டைகள் வழங்கினார்.

போட்டிக்குப் பின் பேட்டியளித்த அவர்,
“போட்டியில் பரிசு எடுத்ததும் இது முடிவு என்று நினைக்கக் கூடாது. இது தொடக்கம். தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளை செய்து, தொழில் முனைவோர்களாக உயர வேண்டும்,” என்று மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
நாடு முழுவதும் 1300 மாணவர்கள் பங்கேற்கும் இந்த போட்டி 60 இடங்களில் நடைபெற்று வருகிறது. 275 பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில், குறைந்தபட்சம் 100 புதிய ஸ்டார்ட் அப்புகள் பிறக்க வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.





