• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கடல் கடந்து கதாநாயகி தேடும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் ‘டாக்டர். தற்பொழுது, சிவகார்த்திகேயன் கைவசம் இரண்டு படங்கள் இருக்கிறது. ஒன்று, ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ மற்றும் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’.
இவ்விரு படங்களில், அயலான் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, கிராஃபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக் கட்டப் பணிகள் நடந்துகொண்டிருக்கிறதுடான் படமும் விரைவில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் 20வது படம் ‘டான்’.

21வது படத்தை தெலுங்கில் துவங்குகிறார் சிவகார்த்திகேயன். தெலுங்கில் ‘ஜதி ரத்னலு’ எனும் சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படம் காமெடி, லவ் என ரொமாண்டிக் ஜானராக இருக்குமாம்.

படத்தின் கதை குறித்து விசாரிக்கும் போது, வெள்ளைக்கார பெண்ணை காதலித்து , கல்யாணம் செய்வது போன்ற கதைக்களமாம். அதனால், படத்துக்காக வெள்ளைக்கார நடிகையை சர்வதேச அளவில் தேடிவருகிறதாம் படக்குழு.

அதாவது, மதரசாபட்டடினம் படத்தில் நாயகியாக நடித்த எமி ஜாக்சன் மாதிரியான ஒரு நடிகையாக இருக்க வேண்டுமென்று உலகமெங்கும் ஹீரோயின் வேட்டை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பை ஜனவரியில் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.