நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு, சிவகங்கை மாவட்டம் சிவகங்கை பஸ் நிலையம் எதிரே நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினத்தையொட்டி, சிவாஜி ரசிகர் மன்றத்தினர் அங்குள்ள அவரது உருவ படத்திற்கு மாலை தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக முன்னாள் எம்எல்ஏ வும்
அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகா் மன்ற பொதுச் செயலாளருமான ராஜசேகரன்
தலைமை வகித்து, சிவாஜி கணேசனின் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிவகங்கை நகராட்சி நகர மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் ரசிகர்கள் காங்கிரஸ் கட்சியினர், மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
