• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நடிகர் பிரபு, ராம்குமார் மீது சகோதரிகள் புகார்…

Byகாயத்ரி

Jul 7, 2022

மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற மகள்களும் உள்ளனர். இதில், இளைய மகன் பிரபு சிவாஜி காலத்தில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். ராம்குமாரும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் பிரபு மற்றும் அவருடைய அண்ணன் ராஜ்குமார் ஆகியோருக்கு எதிராக சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அதில், ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டதாகவும், தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை பிரபு மற்றும் ராஜ்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்களை பிரிப்பதில் மகன்கள் மற்றும் மகள்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு, அது நீதிமன்றம் வரை சென்றிருப்பது திரைத்துரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.