தூத்துக்குடியில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம் நடைபெறும் மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் இளம்பகவத்ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம், இன்று மற்றும் நாளை, காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது. முகாம் நடைபெறும் மையங்களான பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விகாஸா பள்ளிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இதுபோல் பல்வேறு இடங்களில் தற்போது சிறப்பு முகாம் நடந்து வருகிறது இந்த நிலையில் இந்த முகாமில் அரசியல் வாதிகள் அதிகாரம். இருப்பதாகவும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை விடுத்துள்ளனர்!






; ?>)
; ?>)
; ?>)
