• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்…

குமரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து பெறும் நிகழ்வு, வடசேரி சிவகாமி அம்மாள் மண்டபத்தில் வைத்து, குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ. மகேஷ் தலைமையில் நடைபெற்றது.

குமரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து பெறும் நிகழ்வு வடசேரி சிவகாமி அம்மாள் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்வுக்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ. மகேஷ் தலைமை வைத்தார். நிகழ்வுக்கு திராவிட இயக்க பேச்சாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை துவக்கி வைத்தார். நிகழ்வில் மாநில தணிக்கைகுழு உறுப்பினர் சுரேஷ்ராஜன் , முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் இளைஞரணி அமைப்பாளர் அகஸ்திசன் மாணவரணி அமைப்பாளர் அருண் காந்த், மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் சுரேஷ் சி.பிள்ளை பகுதி பொறுப்பாளார்கள் ஜவகர், துரை, ஜீவா, சேக்மீரான் மாநகர இளைஞரணி செயலாளர் சிடிசுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக மாணவர்களின் மருத்துவப்படிப்பை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசு நீட் தேர்வு என்ற ஒன்றை துவங்கியது. இதனால் மருத்துவம் படிப்பு ஒரு கனவாக மாறிபோனது. ஆகவே இதை தடுக்கும் வகையில் நீட் தேர்வை தமிழகத்தில் தடை செய்ய வேண்டுமென திமுக பல்வேறு முகாந்தரங்களை கையாண்டு வருகிறது. இதின் ஒரு நிகழ்வாக இளைஞரணி மாணவரணி, மருத்துவரணி சார்பில் தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வகையில் ஒன்றிய அரசுக்கு கவணத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த இயக்கம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. குமரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவரணி சார்பில் வடசேரி சிவகாமி அம்மாள் மண்டபத்தில் வைத்து குமரி கிழக்கு மாவட்ட செயலாளர்மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.